#கிரகப்பெயர்ச்சி
💥💥கிரகங்களின்
பெயர்ச்சி பாதிப்பை ஏற்படுத்துமா💥💥
💥 கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்வில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றிய சந்தேகம் பலருக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது பற்றிய விளக்கத்தை காண்போம்.
💥 பூமியில் பிறக்கும் அனைவருக்கும், அவரவர் செய்த பூர்வ ஜென்ம கர்மவினைகளே கிரகங்களாக மாறி, ஜாதக கட்டத்தில் அமர்கின்றன. கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. கிரகங்களின் பெயர்ச்சி அவரவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே. ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் பூர்வ ஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி அமர்கின்றன. அந்த அமைவிற்கு ஏற்ப திசைகள் அமைந்து, கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் வினைகளுக்கு ஏற்றபடி வாழ்வு அமைகிறது.
💥 ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் ஒரு நிகழ்வு நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால், கோட்சார கிரகங்கள் யோகத்தை ஏற்படுத்தி வைக்கும். ஜென்ம ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது.
💥 கிரகங்களை வருட கிரகம், மாத கிரகம், தின கிரகம் என பிரித்து பலன் காணலாம்.
தின கிரகங்கள் :
சந்திரன்
💥 சந்திரன் ஒரு தினக் கோளாகும். இது ஒரு ராசியில் இரண்டே கால் நாட்களே இருப்பதால், அதனால் ஏற்படும் தாக்கம் ஓரிரு நாட்களில் குறைந்து விடும்.
💥 மாத கிரகங்கள் :
சூரியன், புதன், சுக்கிரன் ஆகியவை மாத கிரகங்கள் ஆகும். இந்த கிரகங்கள் அனைத்தும் மாதம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடைவதால் இவற்றால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மாதம் வரை நீடிக்கும்.
💥 செவ்வாய் :
செவ்வாய் கிரகமும் மாத கிரகம்தான். ஆனால் 45 நாட்கள் முதல் 6 மாதம் வரை ஒரு ராசியில் இருக்கும் என்பதால், அதனால் ஏற்படும் மாற்றங்களும் ஒரு சில மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கலாம்.

💥 வருட கிரகங்கள் :
குரு, சனி, ராகு-கேது ஆகிய 4 கிரகங்களும் வருட கிரகங்கள். இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால், அவற்றால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகரை பாதிக்கும்.
குரு
💥 குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடைய ஒரு வருடம் ஆகும்.
ராகு-கேது
💥 ராகுவும்-கேதுவும் ஒரே நேரத்தில் பெயர்ச்சியடைவார்கள் இவர்கள். இருவரும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய ஒன்றரை ஆண்டுகள் ஆகும்.
💥 ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் ஆவர். நிழல் கிரகங்களான இவர்கள், சனிபகவானின் பிரதிநிதிகள். மனிதனுடைய வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து சனிபகவானுக்கு அனுப்பிவிடுவார்கள்.
சனி
💥 சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். ஒருவரின் கர்மவினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். 'முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்மா என்ன?" என்பதை கேதுவும் 'முன் ஜென்மத்தில் செய்த கர்மாவிற்கு என்ன பலன்?" என்பதை ராகுவும் சுட்டிக்காட்டுவார்கள்.
💥 ராகு-கேதுக்களின் உதவியுடன் ஒருவரின் கர்மவினைக்கு ஏற்ற பலனை வழங்குபவரே சனிபகவான். கிரகப்பெயர்ச்சிகளிலேயே, சனிப்பெயர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
💥 ஒரு கிரகம் சாதகமான இடத்தில் பெயர்ச்சியானால் நல்வினைப் பலன்கள் மிகுதியாகவும், பாதகமான இடத்தில் பெயர்ந்தால் தீவினைப் பலன்கள் மிகுதியாகவும் அந்தந்த ராசியினரை வந்துச் சேரும்.
💥 ஒருவரின் நல்வினை, தீவினைகளே துன்பத்தை தருகிறதே தவிர கிரகங்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே சோதனைகளை சாதனைகளாக மாற்ற குல தெய்வ வழிபாடு செய்து மகிழுங்கள்.

Comments
Post a Comment