💥💥இன்று ஓர் ஆலயம்💥💥
🔥🔥ஆதி கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோவில்🔥🔥
சுவாமி : அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் சுவாமி.
அம்பாள் : அருள்மிகு நிதியம்மை.
தீர்த்தம் : பாலாவி தீர்த்தம், தூமகேது தீர்த்தம்.
தலவிருட்சம் : மல்லிகை.
தலச்சிறப்பு : சோழர்கள் நாணயம் செய்த இடம் கம்பட்டம், எனவே இங்குள்ள சுவாமி ஆதி கம்பட்ட விசுவநாதர் என்ற பெயர் பெற்றார்.  மூர்க்கநாயனார் சூதாடிய இடம்.
தல வரலாறு : முன்பொரு காலத்தில் இத்தலம் இருந்த இடம் காடாக இருந்தது.  இதற்கு மாலதிவனம் என்று பெயர்.  அப்போது உதயகிரி என்ற ஊரில் தூமகேது என்பவர் சிவனிடம் பக்தி கொண்டு முனிவராகி வாழ்ந்து வந்தார்.  ஒருநாள் முக்திக்குரிய தலம் எது என பெரியோரிடம் விசாரிக்க அவர்கள் கும்பகோணம் எனக் கூறினார்.  உடனே சீடருடன் கும்பகோணம் வந்தடைந்தார் தூமகேது.  மகாமக குளத்தில் நீராடி, ஆதி கும்பேஸ்வரரை வழிப்பட்டு பின் தென்மேற்கில் சிறிது தூரம் செல்ல அங்கு மாலதிவனம் இருக்கக் கண்டார். இவ்வனத்தின் உள்ளே தூமகேது செல்ல, அங்கே ஒரு சிவலிங்கத்தைக் கண்டார்.  ஊள்ளம் உருக கண்ணீர் மல்கி பூஜை செய்ய எண்ணினார்.   நீராட இடம் தேட வருண தீர்த்தம் இருந்தது.  


இவ்வாறு பல நாள் செல்ல, ஒரு நாள் ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் கேள் என்றார் சிவபெருமான்.   முனிவரான தூமகேது 'ஐயனே! உலகை காக்கும் ஈசனே' எனக்கெது வேண்டும்.  நீங்கள் சிவலிங்கமாக இவ்விடத்தில் அமர்ந்திருந்த காரணத்தால் விசுவநாதர் எனப் பெயர் கொண்டு வணங்குவோர்கெல்லாம் ஆனந்தம் தரும் அம்மை ஆனந்தவல்லி என்றும் பெயர் கொள்ள வேண்டும்.  நான் புதுப்பித்த வருண தீர்த்தம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும் என வேண்ட அவ்வாறே ஆகும் என்ற அருளினார் இறைவன்.  கம்பட்டம் என்ற சொல்லுக்கு சோழர்கள் காலத்தில் தங்க சாலை என்று அர்த்தம். சோழர்கள் தஞ்சையை தலைநகராக கொண்டு ஆண்டபோது இங்கு தங்க நாணயம் அச்சடித்தனர்.  எனவே தங்க சாலையில் அதாவது கம்பட்டத்தில் எழுந்தருளியுள்ள விசுவநாதர் கம்பட்ட விசுவநாதர் எனப் பெயர் பெற்றார்.
வழிபட்டோர் : தூமகேது.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரைமாலை 4.00 மணி முதல் இரவு 8.30.மணி வரை.
பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.
திருவிழாக்கள் : புரட்டாசியில் நவராத்திரி விழா, மார்கழியில் திருவாதிரை, பங்குனி உத்திர பெருவிழா.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு அதிகம்பட்ட விசுவநாதர் திருக்கோவில்,
மௌன சுவாமி மடம் அருகில், கும்பகோணம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

#ஆதிகம்பட்டவிஸ்வநாதர்திருக்கோவில்கும்பகோணம்



Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்