💥💥 பூஜையறையில் தண்ணீர் வைத்து பூஜை
செய்வதற்கான கரணம்💥💥
🌟 இறைவனின் அருளை வேண்டி மனம்
முழுவதும் ஈடுபடும் ஒரு விஷயம்தான் பூஜை. ஆண்டவனை மனமுருக வழிபட்டால் நினைத்தது
நிறைவேறும். பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்க வேண்டும்?...
என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்...
🌟 ப்ர என்றால் கடவுள். நாம்
படைக்கும் வெறும் சாதம், ப்ர என்ற கடவுளுடன்
சம்பந்தப்படும்போது, ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி
விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும் என்பது நம்பிக்கை.
🌟 நாம் பூஜை செய்யும்போது இறைவனுக்கு
நைவேத்தியம் படைப்பதுண்டு. அதாவது எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு
வைக்கலாம்.
🌟 நம்முடைய பூஜையறையில் மண் பானைகளிலோ
அல்லது செம்பு பாத்திரத்திரங்களிலோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை
தரும்.
🌟 வழிப்பாட்டின்போது நாள்தோறும்
தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும்.
🌟 அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும்
மந்திரத்தின் (நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு
செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும்.
🌟 பூஜையின்போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி
வழிபடலாம். எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் இரும்பு பொருட்களை பூஜைக்கு
பயன்படுத்தக்கூடாது.
🌟 இரும்பு எமனுக்கு உரியது.
இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது. தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, வெள்ளி, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப்
பயன்படுத்தலாம்.
🌟 பூஜை செய்யும்போதெல்லாம் சிறிய
பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்தநாள் அதை செடியின் மீது
ஊற்றிவிட வேண்டும். இப்படி செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது.
🌟 எனவே, இறைவனை பூஜித்து... பரிபூரண அருளை பெற்று வாழ்வில் அனைத்து வளமும்
நலமும் பெறுவோமாக...!

Comments
Post a Comment