கஷ்டம் தீர்ப்பார் காலபைரவர்...
இன்று
ஸ்ரீ  விகாரி வருடம், ஆடி மாதம் 9ம் தேதி,25.7.19 வியாழக்கிழமை
 தேய்பிறை அஷ்டமி; இந்தநாளில் பைரவரை வழிபடுங்கள். நம் கஷ்டமெல்லாம் தீர்த்துவைப்பார் காலபைரவர்.
வாழ்வில் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே என்று புலம்பாதவர்களே இல்லை. ‘நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலியே. எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ இடைஞ்சல்கள், தடங்கல்கள் என வருந்தாதவர்களே இருக்கமுடியாது.
தேவையே இல்லாத எதிர்ப்பு, எப்போதோ வந்த எதிரிகள் என்று நினைத்து நினைத்து மன உளைச்சல்களில் சிக்கித் தவித்து உழல்பவர்கள் ஏராளம். இவர்கள் அனைவருக்கும் ஆபத்பாந்தவனாக இருப்பவர் காலபைரவர்.
அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகமே சொல்லிவைத்திருக்கிறார்கள்.
பைரவருக்கு உரிய நாள், அஷ்டமி. குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி. பைரவருக்கு உரிய தேய்பிறை அஷ்டமி நாளில், அவரை வணங்கி வழிபட்டால், எல்லா எதிர்ப்புகளும் தவிடுபொடியாகும். எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள். தடைகள் யாவும் விலகும். அடுத்தடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும் என்பது ஐதீகம்.
எல்லா சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி உண்டு. இன்று தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், சிவாலயத்துக்குச் சென்று, பைரவரை வணங்குங்கள். அவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் அனைத்து துக்கங்களையும் வாழ்வின் சகல தேக்கங்களையும் துடைத்தெறிந்து அருளுவார் காலபைரவர்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குவதும் முடிந்தால் ராகுகால வேளையில் வழிபடுவதும் கூடுதல் பலன்களைத் தரும். எனவே, மாலையில் ராகுகால வேளையில், பைரவரைத் தரிசியுங்கள். இன்னும் பலனும் பலமும் பெறுவீர்கள்

மற்ற எல்லா தமிழ் மாதங்களை காட்டிலும் ஆன்மீக சிறப்பு வாய்ந்த தினங்கள் அதிகம் கொண்ட ஒரு மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதம் என்பது சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் பிரவேசிக்கும் காலமாக இருக்கிறது. கடக ராசி சந்திர பகவானுக்குரிய ராசியாகும். அதில் சந்திரனுக்கு நட்பு கிரகமான சூரியன் பிரவேசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தகைய ஆன்மீக சிறப்பு கொண்ட மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை அஷ்டமி தினத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பைரவர் வழிபாடு முறையையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்
ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம். உங்கள் தொழில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன் மூலம் ஏற்படும் கஷ்டம், பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர அல்லது உயர் பதவியில் அமர , சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு கண்டிப்பாய் உதவிடும்.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் உண்டாகும். தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபடுவதும் அல்லது அன்றைய தினம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதும் நன்மையை தரும்
வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு தினமும் இறைவழிபாட்டிற்குரிய தினமாக இருக்கும் ஆடி மாதத்தில் வியாழக்கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவது மிகவும் விஷேஷ பலன்களை பக்தர்களுக்கு தரவல்ல ஒரு அற்புத தினமாக இருக்கிறது.
ஆனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் அந்த தேய்பிறை அஷ்டமி வியாழக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும். வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 1.30 மணியிலிருந்து 3.00 மணிக்குள்ளாக பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாமல் காக்கும். பொருட்கள் களவு போகாமல் பாதுகாக்கும். வருமானம் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். உங்களுக்கு செய்யப்படும் மாந்திரீக ஏவல்கள், செய்வினை தந்திரங்கள் பலிக்காமல் போகும். கொடிய நோய்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குணமாகும்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
#ஆடிதேய்பிறைஅஷ்டமிபைரவர்


Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்