#பைரவர்வழிபாடு
💥💥பைரவர் வழிபாடு💥💥
எந்த மாதத்தில்... எந்த பைரவரை... வணங்கினால் சிறப்பு….

🌟 பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்.

🌟 காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.

🌟 தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாவார்.

🌟 பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. ஆதலால் நாய்களை பைரவர் என்றும் சொல்கின்றார்கள். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

🌟 செல்வ செழிப்புடன் வாழவும், எதிரிகளின் தொல்லை விலகவும் மற்றும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதும் பைரவர் வழிபாடுதான்.

🌟 பைரவருக்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் தனித்தன்மை வாய்ந்த பலன்கள் கிடைக்கும்.



எந்த மாதத்தில் எந்த பைரவரை வணங்கினால் சிறப்பு

🌟 சித்திரை - சண்ட பைரவர்

🌟 வைகாசி - ருரு பைரவர்

🌟 ஆனி - உன்மத்த பைரவர்

🌟 ஆடி - கபால பைரவர்

🌟 ஆவணி - சொர்ணாகர்ஷண பைரவர்

🌟 புரட்டாசி - வடுக பைரவர்

🌟 ஐப்பசி - சேத்ரபால பைரவர்

🌟 கார்த்திகை - துவஷ்டா பீஷண பைரவர்

🌟 மார்கழி - அசிதாங்க பைரவர்

🌟 தை - குரோதன பைரவர்

🌟 மாசி - ஸம்ஹார பைரவர்

🌟 பங்குனி - சட்டநாத பைரவர்

பரிகாரம் :

🌟 தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் உண்டாகும்.

🌟 சனி மற்றும் ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்வது நல்லது.

🌟 குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Top of Form
Bottom of Form


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :