#நவவிரதங்கள்
💥💥சிவனுக்குறிய நவ விரதங்கள்💥💥
1 . சோமவார விரதம்
: -
திங்கட்கிழமை சோம வாரம் எனப்படும்
. கார்த்திகை மாதம் முதல் திங்கட் கிழமையில் ஆரம்பித்து விதிமுறைப்படி செய்தல்
வேண்டும் . இவ்விரதத்தைப் போல் சிவபெருமானுக்கு விருப்பமான விரதம் வேறொன்றும்
இல்லை . சந்திரன் இவ்விரதம் இருந்ததாலேயே சிவனின் திருச்சடையில் வீற்றிருக்கும்
பேறு பெற்றார் .
நீராடி , நித்திய கருமங்கள் முடித்து
சிவபூஜை செய்தபின் ஒரு வேதியரையும் , அவர் மனைவியையும் அழைத்து அவர்களைச் சிவனாகவும் உமையாகவும்
பாவித்து இயன்ற வரைத் தானம் செய்தல் வேண்டும் . சிவபூஜை செய்ய வாய்ப்பு
இல்லாதவர்கள் ஆலயம் சென்று பஞ்சாமிர்தத்தினால் அபிஷேக அர்ச்சனைகள் செய்து
அடியார்களுக்கு ' உணவளித்து அன்று முழுவதும்
உபவாசம் இருக்க வேண்டும் , '
( உண்ணா நோன்பு ) இவ்வாறு விரதம் இருப்பவர்கள் கைலாய பதவியடைவார்கள் . குறிப்பாக ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் இவ்விரதம் இருந்தால் தோஷம் நீங்கும் . சந்திர திசை நடக்கும் 10 ஆண்டுகளும் சோமவார விரதம் இருப்பது நன்று . சிவன் கோவில் சென்று செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் . நவக் கிரகங்களை வணங்கி சந்திரபகவான் முன் நின்று . . .
" அலைகடல் தனினின்று அன்று வந்து துதித்த போது கலைவளர் திங்களாகி கடவுளறெவரும் ஏத்தும் சிலைநுதல் உளம்பாள் பங்கன் செஞ்சடை பிறையாயமே மலைவல மாகவந்த மதியமே போற்றி போற்றி ”
என்னும் தோத்திரத்தைப் பாடுதல் வேண்டும் .

2 . திருவாதிரை
விரதம் :-
மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரம் கூடிய பவுர்ணமி அன்று இவ்விரதத்தை மேற்கொள்வது சிறப்பு தரும் . ஆடல்
வலலனாகிய நடராஜப் பெருமானுக்கு உகந்த நாள் , திருவாதிரை சிவனுக்கும் , திருவோணம் நாராயணனுக்கும் விரதம் இருக்க உகந்த நன்னாளாகும் .
பன்னிரெண்டு தமிழ் மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் ஆகும் . பகவத் கீதையில் ஸ்ரீ
கிருஷ்ண பரமாத்மா “ மாதங்களில் நான் மார்கழியாக
இருக்கிறேன் ” என்றார் . பாரத யுத்தம் நடந்தது
மார்கழியில்தான் இதனைத் தனுர் மாதம் என்றும் அழைப்பர் . இத்திங்களில் வீடுகளின்
வாசல்களைத் தூய்மை செய்து பெரிய பெரிய கோலங்களிட்டு அதில் சாணி மொத்தையின் மேல்
பரங்கிப் பூக்களை வைப்பது வழக்கம் . அதிகாலையே நீராடி , சிவநாமங்களை ஜபித்து , நம்மால் முடிந்தளவு அடியார்கட்டு
உணவளித்து , அருட்பெருஞ்சோதியான சிவனிடம்
மனமுருக பிரார்த்தனை செய்து சிறப்பான தூய வாழ்வினை இவ்வுலகிலும் அவ்வுலகிலும்
பெறுவோம்.
3 . உமா மகேசுரர்
விரதம் : -
கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று
இவ்விரதம் இருக்க வேண்டும் . உமாமகேஸ்வர மூர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும் .
எல்லா விரதங்களையும் போல வீட்டினைச் சுத்தம் செய்து மெழுகி கோலமிட்டு ஒரு
குறிப்பிட்ட இடத்தில் பொன் அல்லது வெள்ளியால் செய்த உமை , சிவன் திருவுருவங்களைப் பஞ்ச
கவ்வியத்தினால் அபிஷேகம் செய்து புது துணி அணிவித்து திரு அமுது படைக்க வேண்டும் .
தீப தூபங்கள் காட்டி மனமுருக வணங்குதல் வேண்டும் . அன்று ஒருபொழுது மட்டுமே உண்ண
வேண்டும்
சிவ ஆலயஞ் சென்று தம் மனதில் கருதிய பொருளை விரும்பி இறைவனைத் தோத்திரம் செய்ய வேண்டும் . 15 கலசங்களில் 15 உமாமகேஸ்வரப் பிரதிமை வைத்து 15 வகை பண்டங்களைப் படைத்து 15 முடியுள்ள கயிறு தரிக்க வேண்டும் . 15 ஆண்டுகள் இவ்விரதம் இருந்தால் சகல போகங்களும் பெற்று முடிவில் மோட்சமும் பெறலாம் . மறுநாள் காலையில் கும்பத்தையும் , பிம்பத்தையும் முன்போல் வணங்கி
அந்தணருக்கு அவற்றைத் தானமாகக் கொடுத்து அடியார்களுடன் திரு அமுது செய்ய வேண்டும் , ஆண்டுதோறும் உமாமகேஸ்வர நோன்பினைக் கடைபிடிப்பவர்கட்கு இம்மையில் சகல செல்வங்களும் மறுமையில் முக்தியும் கிட்டும் என்பது சிவத்தின் வாக்கு .

4 . கேதாரீஸ்வரர்
விரதம் :-
பரமசிவனுக்கு கேதாரீஸ்வரர் என்ற
திருநாமமும் உண்டு . கேதாரீஸ்வரரை நோக்கி கெளரி செய்த விரதம் ஆதலால் இப்பெயர்
பெற்றது . பிருங்கி என்ற முனிவர் . சக்தியை விலக்கி சிவனை மட்டும் வலம் வந்ததைக்
கண்டு சக்தி சினந்து , சிவபிரானில் இடப்பாகம் பெற கெளதம
முனிவர் வனத்தில் தவம் இருந்தார் . கௌதமர் . தேவியை வணங்கி விரதத்தின் மகிமையைக்
கூறினார் . ' விதிப்படி ஸ்ரீ பார்வதிதேவி
ஈசுவரனை நோக்கி விரதமிருந்து பாதி உடம்பை ( இடப்பக்கம் ) பெற்ற நாள் இது . ஈஸ்வரன்
அர்த்த நாரீஸ்வரர் ஆன புண்ணிய நாள் . இது ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சத்துச்
சதுர்த்தித் திதியில் வருகிறது . இந்நாளில் அனுஷ்டிக்கப்படும் விரதமே கேதாரீஸ்வர
விரதம் எனப்படுகிறது . 21 இழையிலான காப்பை ஆண்கள்
வலக்கையிலும் , பெண்கள் இடக்கையிலும் கட்டிக்
கொள்ள வேண்டும் . பாத்ரபத சுக்லாஷ்டமி முதல் அமாவாசை வரை 20 நாட்களும் சூரியன் மறைந்த , பின் ஒரு பொழுது மட்டும் உணவு
அருந்தி இரவு தருப்பையில் உறங்க வேண்டும் . இறுதி நாளான சதுர்த்தியன்று கலசம்
வைத்து பூஜை செய்து கேதார நாதரை வணங்கி உபவாசம் இருக்க வேண்டும் . மறுநாள்
உதயத்தில் பாரணம் பண்ண வேண்டும் . இவ்விரதத்தின் மகிமையை அளவிட்டுக் கூற இயலாது , இவ்விரதம் இருப்வர்களின் வறுமைகள்
ஒழிந்து செல்வம் பெருகும் , நினைத்தது எல்லாம் ஈடேறும் .
5 . கல்யாண
சுந்தரர் விரதம் :-
இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று
விரத முறைகளை மேற்கொள்ளப்படும் இவ்விரத காலங்களில் ஒருபொழுது மட்டும் உணவு கொண்டு
சிவனின் நாமாவளிகளை பாரணம் செய்தல் வேண்டும்
6 . சூல விரதம் :
சூலாயுதம் தரித்த சிவபெருமானுக்காக
இவ்விரதத்தை தை அமாவாசையன்று இருக்க வேண்டும் ஒரு பொழுது மட்டும் பகல் உணவு
அருந்தலாம் . இரவு உபவாசம் இருக்க வேண்டும்
7 . இடப விரதம் :
இடபாரூடராகிய சிவபெருமானுக்கு
இவ்விரதம் வைகாசி ! சுக்கல பட்சம் அஷ்டமி அன்று மேற்கொள்ளப்படும் ' இவ்விரதத்திலும் ஒரு பொழுது பகல்
உணவு மட்டும் அருந்தலாம்.
'8. மஹா
சிவராத்திரி விரதம் :
சிவனுக்குறிய ராத்திரி மகா
சிவராத்திரி ஆகும். சிவராத்திரி நவராத்திரி எனும் இரு பண்டிகைகள் மட்டுமே ராத்திரி
என்னும் அடைமொழியில் உள்ளது. இதில் ஒன்று சிவனுக்கும் மற்றொன்று சக்திக்கும்
உரியதாகும்.
இவற்றில் மாதம் தோறும் வருவது மாத சிவராத்திரி ஆகும். மாதந்தோறும் கிருஷ்ணபட்ச சதூர்த்தியில் வருவது நித்திய சிவராத்திரி , சோமவாரத்தன்று பகல் , இரவு ஆகிய இரு பொழுதுகளிலும் அமாவாசையாக இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் கிருமணபட்ச சிவராத்திரிதான் மகா சிவராத்திரியாகும்.

சிவராத்திரி விரதம் கடைபிடிக்கும்
முறைகள் :
மகா சிவராத்திரிக்கு முதல் நாள்
ஒரே ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும் . தூய ஆடை உடுத்தி தூய்மையோடு
சிவபெருமானை வழிபட வேண்டும் . அன்று இரவு நல்ல சிந்தனையோடு உறங்க வேண்டும் . மறுநாள்
அதிகாலையில் எழுந்து , நல்ல நீரில் குளித்து , சூரிய உதயத்திற்கு முன்பே
சிவசிந்தனையோடு கோயிலுக்கு சென்று சிவனை வணங்குதல் வேண்டும் . பகல் முழுவதும் உணவு
எதுவும் உண்ணாமல் இறைவனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் . இரவிலும் குளிக்க
வேண்டும் . இரவில் நான்கு காலப் பூஜை அமைத்து சிறப்பாக வழிபட வேண்டும் . இரவு
முழுவதும் பஞ்சாட்சர ஜெபம் செய்ய வேண்டும் . சிவராத்திரியன்று ஒரு பஞ்சாட்சரம்
உச்சரித்தால் ஏனைய நாட்களில் நூறு பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் . சந்தனம் , புனுகு , கஸ்தூரி , ஜவ்வாது . அகில் , பச்சை கற்பூரம் , குங்குமப்பூ ஆகியவற்றால் அபிஷேகம்
சிவனுக்கு செய்தால் பலன் கூடும் என்பது நம்பிக்கை . வெண்பொங்கல் , வடை , அன்னம் , தோசை போன்றவைகளை கடவுளுக்கு
படைக்க வேண்டும் . சிவனுக்கு உகந்தது வில்வம் . ஒவ்வாதது தாழம்பூ ஊமத்தை , எருக்கலம் போன்றவை சிவனுக்கு
பிடிக்காதது . சிவராத்திரி விரதத்தை முறைப்படி மேற்கொண்டால் சிவனடியார்களுக்கு
எல்லா நன்மைகளையும் தந்து துன்பங் ' களிலிருந்து பக்தர்களை காத்தருள்வார் .
9. பிரதோஷ விரதம்:-
பிரதோஷ நாளன்று அதிகாலை
எழுந்திருத்தல் வேண்டும் . காலைக்கடன்களை முடித்து , நீராடி சிறப்பாக இறைவன் நாமாவளிகளைக்
கூறிப் பூசித்தல் வேண்டும் . உபவாசம் இருத்தல் சிறப்பு தரும் . ஆலயம் சென்று லிங்க
மூர்த்திக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யலாம் எப்பொழுதும் இறை
சிந்தனையுடன் சிவபுராணத்தையோ பஞ்சாட்சரத்தையோ சொல்லிக் கொண்டிருத்தல் மிகவும்
நல்லது
சிறப்பாக நேர்த்திக் கடன் செய்ய விரும்புவோர் , ஆலயம் சென்று மாலையில் சிவபிரானுக்கும் ரிஷப தேவருக்கும் அபிஷேகம் செய்தல் வேண்டும் . ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும் . காரரிசியில் வெல்லம் கலந்து ரிஷப தேவருக்குப் படைத்தல் வேண்டும் . ரிஷப தேவரின் கொம்புகளுக்கு இடையே பார்த்துச் சிவபிரானைத் தரிசித்தல் வேண்டும் . இதுபோல் மூன்று முறை பிரதட்சணம் செய்தல் வேண்டும் . பிரதோஷ காலத்தில் ( 5 . 45 முதல் 6 . 30 வரை ) பிரதோஷ நாயகரான சிவபெருமான் உமா தேவியாருடன் ரிஷபாரூடராய் வலம் வரும் பொழுது கண்டு தரிசித்தல் மிகப்பெரிய புண்ணியமாகும்
வேத பாராயணத்துடன் முதலிலும் , திருமுறை பாராயணத்துடன் இரண்டாவதும் , நாதசுர மங்கல இசையுடன் மூன்றாவதுமாக மூன்று முறை ஆலய வலம் நடைபெறும் இரண்டாவது வலம் வரும் பொழுது இறைவனையும் , இறைவியையும் ஈசான் நிக்கில் அமரச் செய்து , அப்பொழுது காட்டும் கற்பூர ' ஆரத்தியைக் கண்டு தரிசிப்போர்க்கு மிகுந்த பலனுண்டு . ' தரிசனம் செய்த பின்னர் , வீடு சென்று , ஒருவர் இருவருக்கு ' அன்னமிட்டு பிறகு தாமும் உண்டு பிரதோஷ விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Comments
Post a Comment