#வள்ளி
 💥💥வள்ளி💥💥
தொண்டை மண்டலத்தில் வசித்த வந்த நம்பி என்ற குறவர் இனத்து தலைவன் தனக்கு ஆண்குழந்தைகள் மட்டுமே இருந்த படியால் பெண் குழந்தை வேண்டும் என பல கடவுள்களை வேண்டினான்.
சிலமுகி என்ற முனிவரின் மாய சக்தியால் அரபி என்ற அழகான மானின் வயிற்றில் பிறந்தாள் வள்ளி.வேட்டைக்கு சென்ற குறவர்கள் வள்ளிக்கிழங்கு தோன்றும் இடத்தில் இந்த அழகான குழந்தையை கண்டெடுத்தனர் அதனால் அந்த குழந்தைக்கு வள்ளி எனும் பெயர் வந்தது.
குறவர்கள் வள்ளியை கண்டெடுத்த இடம் இலங்கையில் தென்பகுதியில் உள்ள கதிர்காமம் என்ற இடமாகும் அதனால்தான் அந்த இடத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகன் தற்போது கோயில் கொண்டுள்ளார்.
வள்ளிக்கு பன்னிரண்டு வயதானபோது வேடர் குல வழக்கப்படி அவளை நெல் கதிர்கள் பயிரிடப்பட்டு இருந்த வயலுக்குச் சென்று அங்கு உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தப் பரணில் அமர்ந்து கொண்டு நெற் கதிர்களை பறித்து உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் துரத்தும் பணியில் அமர்த்தினார்கள்.


அப்போது ஒரு நாள் அங்கு எதேச்சையாக வந்த நாரதர் அவளது அழகைக் கண்டு வியந்து, உடனே தணிகை மலைக்கு கிளம்பிச் சென்று முருகரிடம் அவள் அழகை பற்றி விவரித்தார். அது மட்டும் அல்ல வேடவ இனத்தினரும், வள்ளியும் அவர் மீது (முருகன் எனும் கடவுள் மீது) வைத்து இருந்த பக்தியைக் குறித்துப் பேசினார்.
அதைக் கேட்ட முருகனும் தன் உருவை ஒரு வேடர் போல மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு சென்று வள்ளியை பார்த்து அவள் அழகில் மயங்கி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இதையறிந்த தேவசேனை(தெய்வானை)கோபமுற்றார் அப்போது முருகன, வள்ளியும்,நீனும் முன் ஜென்மத்தில் என்னை மணக்க விரும்பிய சகோதரிகள் என்று எடுத்துகூறி சமாதான படுத்தினார்
புராணத்தில் வள்ளி தெய்வானை கதைகள் இருதாரமாக சொல்லப்பட்டாலும் அதில் ஒரு தத்துவம் உள்ளது அதாவது மனிதருக்கு கிரியா சக்தி,ஊக்க சக்தி எனும் இரு சக்திகள் முக்கியமானது அதாவது தேடி போகும் பக்தன்,தேடி வரும் பக்தன்(வள்ளி,தெய்வானை) அந்த தத்துவத்தை மறைமுகமாக உணர்த்தவே முருகன் அப்படி காட்சியளிக்கிறார்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்