*#ஆலயங்களில் #வழங்கப்படும் #பிரசாதம்
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
💥💥ஆலயங்களில் வழங்கப்படும் பிரசாதம்💥💥
*திருப்பதியில் லட்டு பிரசாதமாகவும், பழனியில் பஞ்சாமிர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு புகழ்பெற்ற கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் குறித்து பார்ப்போம்*.
*திருப்புல்லாணி* - பாயாசம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றது.
*காஞ்சிபுரம் வரதராஜர் கோயில்* - குடலை இட்லி
*வைத்தீஸ்வரன் கோயில்* - தினை மாவு
*திருச்செந்தூர்* - அரிசிப்புட்டு (ஆறுபடை வீடுகளில் ஒன்று)
*திருவல்லிக்கேணி* - திருக்கண்ணமுது
*சிதம்பரம்* - களி, சம்பா சாதம் சிறப்பான நிவேதனமாகும்
*அழகர் கோவில்* - தோசை ( முழு உளுந்தை ஊற வைத்து பச்சரிசி மாவுடன் மிளகு சீரகம் சேர்த்து நெய்யை ஊற்றி தயாரிக்கப்படும் தோசை)
*ஆழ்வார் திருநகரி* - வங்கார தோசை
*சபரிமலை* - அப்பம் மற்றும் அரவணை


*சுக்கு மிளகு கஷாயம் நிவேதனம்* - குற்றாலம் குற்றாலநாதர் மற்றும் குழல்வாய்மொழி அம்மனுக்கு நாள்தோறும் சுக்கு மிளகு சேர்த்து கஷாயம் படைக்கப்படுகிறது. ( இந்த குற்றாலம் அருவியை இருவருக்கும் தலைவனையும் ஜலதோஷம் வராமல் இருக்கவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.)
*பண்ருட்டி ஆரிய வைசிய சமூக திரு நந்தவனம் பகவான் ஸ்ரீ தன்வந்திரி திருக்கோவில்* அணைத்து நோய்த்தீர்க்கும் அறிய வகை மூலிகை லேகியம் மாதம் தோறும் அமாவாசை அன்று பிரசாதமாக வழங்கப்படுகிறது
*திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயம்* - தமிழ் மாதத்தில் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம். (துவரம்பருப்பு அரிசி காய்கறிகள், தேங்காய் அரைத்து போட்டு சேர்த்த கூட்டாஞ்சோறு)
*பகவதி ஆலயம்* எர்ணாகுளம் கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி ஆலயத்தில் மருந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.
*காளிகாம்பாள் கோவில்* : திருச்சி காளியம்மன் கோவிலுக்கு முந்தைய பஸ் ஸ்டாப்பில் உள்ள காளிகாம்பாள் கோவில்- வெள்ளி தோறும் ராகு காலத்தில் துர்க்கைக்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனை குழந்தையின் நாவில் தடவினால் வாய் பேசாத குழந்தையும் சில நாட்களில் பேசத் தொடங்கி விடுமாம்.
*உறையூர் கமலவல்லி சமய அழகிய மணவாளர் ஆலயம்* - குங்குமத்திற்கு பதிலாக சந்தனம் பிரசாதம் தரப்படுகிறது. இதனை நாம் அனைவரும் உட்கொள்ளலாம்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :