சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில்

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில் தஞ்சாவூர், மேலவீதியில் மூலை அனுமார்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் ஸ்ரீ பிரதாப சிம்மனால் (கி.பி. 1739-1763) கட்டப்பட்டது. பொதுவாகவே ஆஞ்சநேயர், ஈஸ்வரன் அம்சம் உடையவராகக் கருதப்படுகிறார். நரசிம்மம், வராகம், கருடன் ஆகிய சக்திகள் ஒருங்கே இவரிடம் உள்ளன. இவருடைய வாலில் நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வழிபட்ட தலம் என்ற பெருமையை தஞ்சை மூலை அனுமார் பெற்றுள்ளார். இவர் நோய்கள் பல தீர்க்கும் சஞ்சீவி மலையை பெயர்த்துக் கொண்டு வந்தவர். இந்த அனுமனை வழிபடும் பக்தர்களுக்கு நினைத்த நல் காரியங்களில் வெற்றியைத் தந்து, தீராத நோய்களையும் தீர்த்து வைத்து அருள்பாலித்து வருகிறார். மேலும் படிக்க:http://goo.gl/MZndNC

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்