துர்க்கை துதி

ஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள் துர்க்கை துதி (மகரம்) சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன் வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன் முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன். சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன் பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன் சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன் கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன் மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன் கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன் அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன் மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் !

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்