செல்வம் தரும் சொர்ண பைரவர்
செல்வம் தரும் சொர்ண பைரவர் !!
சுவர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். தன்னுடைய பெயரிலேயே சுவர்ணத்தைக் கொண்ட இவர் அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் அள்ளி அள்ளி தருபவர். நினைத்ததையெல்லாம் தரும் கற்பக மரத்தடியில் அழகிய சிம்மாசனத்தில் சிவசக்தி வடிவில் சுந்தரரூபனாக மடியில் சுவர்ணாதேவி அமர்ந்த நிலையில் காட்சித் தருபவர் சுவர்ணாகர்சன பைரவர் ஆவார்.
“சுவர்ணாகர்சன” என்றால் “எளிதில் கவரக்கூடிய” என்று அர்த்தம். சுவர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருபவர், அதாவது தன்னை பயபக்தியுடன் உண்மை அன்பு கொண்டு வேண்டுபவர்களிடம் பொற்குவியலை கவர்ந்து இழுத்து தானாக சேரும்படி செய்பவர் என்று பொருளாகும்.
பண்டைக் காலங்களில் அரசர்கள் தங்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவப் பெருமானை நிறுவி அவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு வ்நதமையினால் அவர்களது நிதிச் சாலைகளில் பொன் குவிந்து கொண்டே இருந்ததுடன் அவர்களை எவராலும் எளிதில் வெல்ல இயலாத அளவு சக்தியைப் பெற்றிருந்தனர். இதுதான் உண்மை. பைரவர் திகம்பரராய்த் திகழ்ந்த போதிலும் உண்மையான அன்பர்களுக்கு பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்குபவர்.
மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/sorna-bairavar-gives-wealth-daily-news19.htm
Comments
Post a Comment